போட்டியில் ஜெயிக்க வருண் எடுத்த முடிவு.. பதறி போன சத்யா! மெளன ராகம் சீரியலில் சத்யாவின் மாமா பழனி வைத்திருக்கும் போட்டியில் ஜெயிக்க எந்த எல்லைக்கும் போக முடிவு எடுக்கிறார் வருண். மெளன ராகம் சீரியலை பொறுத்தவரையில் வருண் - சத்யா சேர போகும் எபிசோடுக்காக தான் மொத்த ரசிகர்களும் வெயிட்டிங். சத்யாவை , அவரின் அம்மா மல்லிகா, மாமா எல்லோரும் சேர்ந்து வருணிடம் சேர்த்து வைப்பது தான் கதை. ஆனால் அது எப்போது நடக்கும் என தெரியவில்லை. இத்தனை நாளுக்கு பிறகு இப்போது தான் சத்யாவின் மாமா வருணுக்கு ஒரு போட்டி வைக்கிறார். அதாவது சத்யாவை போல் பாட்டு பாடி காட்டினால் போதும் என்பது தான் அந்த சவால். ஒரே ஒரு பாட்டு பாடி விட்டால் போதும், வருண் ஜெயித்து விடுவார், சத்யாவுடன் சென்னைக்கும் கிளம்பிவிடுவார். அந்த நிகழ்ச்சிக்கு சித்து - ஸ்ரேயா தான் வரவேண்டும்.. அடம் பிடிக்கும் ரசிகர்கள்! வருணுக்கு சத்யா மாமா பழனி, வைத்திருக்கும் போட்டி பற்றி மொத்த ஊருக்கும் தெரிந்து விட்டது. வருண் ஜெயிக்க வேண்டும் என மொத்த ஊரும் அவருக்கு வெவ்வேறு ஐடியாக்களை தருகின்றனர். அந்த வகையில், எஸ்டேட் மேனேஜர் பேச்சை கேட்டு ஆற்றில் இறங்கி ஸ்ருதி கற...