மாதம் ரூ.5000 வரை வட்டி கிடைக்கும்.. போஸ்ட் ஆபீஸில் உடனே இந்த கணக்கை தொடங்குங்கள்!


மாதம் ரூ.5000 வரை வட்டி கிடைக்கும்.. போஸ்ட் ஆபீஸில் உடனே இந்த கணக்கை தொடங்குங்கள்!


போஸ்ட் ஆபீஸில் இருக்கும் மாத வருமான திட்டத்தின் கீழ் எப்படி மாதம் ரூ. 5000 வரை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆபத்து இல்லாத சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் கட்டாயத்தில் இப்போது பொதுமக்கள் உள்ளனர். கொரோனாவுக்கு பிறகு நிதி சுமை அதிகரித்துள்ள நிலையில் சேமிப்பு, முதலீடு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டு வருகிறது. அதனால் தான் அரசு முதலீடு திட்டங்களில் ஆபத்து அதிக இல்லாமல் நிலையான வருமானத்தை பெற முடிகிறது. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் செயல்பாட்டில் இருக்கும் மாதாந்திர வருமான திட்டம் (எம்ஐஎஸ்) குறித்து ஒவ்வொரு முதலீட்டாளர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதாந்திர வருமான திட்டத்தின் கீழ் யாராவது கூட்டுக் கணக்கைத் திறந்து அதில் ரூ .9 லட்சம் வரை டெபாசிட் செய்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .4,950 சம்பாதிக்கலாம்.

savings account : சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி இந்த வங்கிகளில் கிடைக்கும்!

இதுவே தனிக்கணக்கு என்றால் மாதம் ரூ.2,475 பெறலாம். ஏனெனில் இந்த சேமிப்பு கணக்கில் அசல் மீது 6.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். எனவே, நீங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 4,950 ரூபாய் வட்டி பெறுவீர்கள். நீங்கள் விருப்பப்பட்டால் இந்த திட்டத்தின் முதிர்வு காலத்தை அதிகரிக்கலாம். வட்டியை நீங்கள் ஒவ்வொரு மாதமும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்த வழியில், உங்கள் முதலீட்டில் அசல் தொகையை பாதிக்காமல் மாதந்தோறும் வட்டியை பெறுவீர்கள். திட்டம் முதிர்ச்சியடையும் நேரத்தில் நீங்கள் உங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவீர்கள்.

வெறும் ரூ. 417 இருந்தால் போதும்.. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த திட்டம் உங்களை லட்சாதிபதி ஆக்கும்!

இது நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு எந்தப் பணம் ஆரம்பத்தில் முதலீடு செய்யப்பட்டதோ அந்த விகிதத்தில் நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது. இது தவிர, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வரி சேமிப்பு திட்டமாக செயல்படுகிறது, இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விலக்கு பெற முடியும்.

MIS கணக்கைத் திறக்க விரும்பும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 1,000 என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அஞ்சலகத்தின் வழிகாட்டுதல்களின்படி, அதன்பின் வைப்புத்தொகை ரூ.1,000 மடங்குகளில் இருக்க வேண்டும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஒற்றைக் கணக்கிற்கு ரூ.4.5 லட்சமாகவும், கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.9 லட்சமாகவும் இருக்கும். ஒரு தனிநபர் அதிகபட்சமாக ரூ 4.5 லட்சத்தை MIS இல் முதலீடு செய்யலாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog