நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46ஆக குறைவு1900503620
நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 46ஆக குறைவு மத்திய அரசின் வளர்ச்சி பணிகளால் நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 70ல் இருந்து 46 ஆக குறைந்துள்ளதாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார். மக்களவையில் பாஜக எம்பிக்களின் கேள்விகளுக்கு எழுத்தப்பூர்வமாக பதிலளித்த அவர், 2014 முதல் 2022ம் ஆண்டு வரை நக்சல் பாதித்த மாநிலங்களுக்கு சாலை அமைப்பதற்காக 11,780 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நக்சல் பாதித்த மாவட்டங்களில் 32 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் நித்யானந்தா ராய் குறிப்பிட்டார்.