ரூ.1000 வழங்கும் திட்டம் விண்ணப்பம் செய்வதில் புதிய சிக்கல்... மாணவிகள் அவதி93784817
ரூ.1000 வழங்கும் திட்டம் விண்ணப்பம் செய்வதில் புதிய சிக்கல்... மாணவிகள் அவதி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் மாணவிகள் பயன்பெற புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் https://penkalvi.tn.gov.in இணையதளத்தில் மாணவிகள் பலர் விண்ணப்பிக்க தொடங்கியதால் சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளது இதனால் மாணவிகள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மாதம் 1000 உதவி தொகைக்காக பதிவு செய்ய, கல்லூரிகளில் சர்வர் டவுனாக உள்ளது அல்லது ஆள் இல்லை என கூறி வெளியில் பதிவு செய்ய கூறுவதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இணையதளத்தின் தொழில்நுட்ப கோளாறை அரசு விரை...