சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பீட்டில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, ஓமந்தூரார் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் (ரோபோடிக்) அறுவை சிகிச்சை மையத்தை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15.3.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்தியாவில் மாநில அரசு மருத்துவமனைகளில் முதலாவதாக சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், 34 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையத்தை (Advanced Robotic Surgery Centre)திறந்து வைத்தார். இந்த அதிநவீன இயந்திர மனிதவியல் அறுவை சிகிச்சை மையம் வாயிலாக அறுவை சிகிச்சை நிபுணர்களால், கடினமான அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாகவும் நுணுக்கமாகவும், ரோபோடிக் கருவிகள் மூலம் மேற்கொள்ள இயலும். லேபராஸ்கோபியின் அதிநவீன முன்னேற்றமே ரோபோடிக் அறுவை சிகிச்சை ஆ...