அப்படி போடு! பிக் பாஸ் பிரியங்கா சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரல் தகவல்
அப்படி போடு! பிக் பாஸ் பிரியங்கா சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வைரல் தகவல்
சின்னத்திரை உலகின் டாப் ஆங்கர் என்றால் டிடிக்கு பிறகு பிரியங்கா தேஷ்பாண்டே தான். 30 வயதாகும் இவர் சன் டிவி - சுட்டி டிவியில் தனது பயணத்தை தொடங்கி இப்போது விஜய் டிவியில் ஆஸ்தான ஆங்கராக மாறிவிட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை தற்போது பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் பிரியங்காவையும் அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. தொடர்ந்து 4 சீசன்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தான் ஆங்கரிங் செய்து வருகிறார். இடை இடையில் அவர் பிக் பாஸ் சென்ற சமயம், டூருக்கு போன சமயத்தில் மைனா நந்தினி,குரேஷி, தீனா, மணிமேகலை போன்றவர்கள் நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டாலும் சூப்பர் சிங்கர் ஆங்கர் என்றால் அது பிரியங்கா தான்.
நீண்ட வருடம் கழித்து சன் டிவி சீரியலில் நடிக்க வரும் ரஜினி பட நடிகர்!
இதுத்தவிர தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சிகளையும் பிரியங்கா ஆங்கரிங் செய்ய மிஸ் செய்வது இல்லை. இவருக்கும் மாகாபா ஆனந்துக்கும் ஆங்கரிங்கில் பயங்கரமாக கெமிஸ்ட்ரி வொர்கவுட் ஆனதால் இவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு பிரியங்காவின் ரசிகர்கள் கூட்டம் இன்னும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். சமீபத்தில் அவரின் சம்பளம் விவரம் குறித்த தகவல் வெளியாகி இருந்தது.
பெண் குழந்தை பிறந்தது.. ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தாமரை!
கடந்த வாரம் அவரின் கணவர் பிரவீன் குறித்த பேச்சுக்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் தற்போது பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தை புரட்டி போட்டு வருகிறது. வெறும் பிரியங்கா மட்டுமில்லை மாகாபா ஆனந்த், கோபிநாத், டிடி என தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்களின் சொத்து மதிப்புகள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பதற்கு எந்தவித அதிகாரப்பூர்வ விவரமும் கிடைக்கவில்லை இந்த சமயத்தில் தற்போது பிரியங்காவின் சொத்து மதிப்பு குறித்த விவரமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்து இருக்கும் தகவலின் படி, பிரியங்காவின் சொத்து மதிப்பு 1.16 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 9 கோடி)என குறிப்பிடப்பட்டுள்ளது. வைரலான இந்த தகவலை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment