மரம் வளர்த்தா தங்க காசு பரிசு! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு! அடுத்த வருடம் கலைஞர் பிறந்த தினத்தன்று, இந்த ஒரு வருடம் முறையாக மரத்தைப் பராமரித்து வருபவர்களுக்கு தங்க காசு பரிசளிப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இனி வரும் காலங்களில் இந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த வகையில் நடப்பாண்டில் கொண்டாடப்பட்ட ஜூன் 3ம் தேதி கருணாநிதி 99வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் பல்வேறு உதவிகளையும்,கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார். இதன் ஒரு பகுதியாக அமைச்சர் சேகர்பாபு கலைஞர் பிறந்த நாள் விழாவில் சென்னை அண்ணாநகரில் மாவட்ட கிழக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி சார்பில் 9999 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும் மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருபவர்களுக்கு அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்த நாளில் தங்க நாணயம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அம...