மரம் வளர்த்தா தங்க காசு பரிசு! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!387976754


மரம் வளர்த்தா தங்க காசு பரிசு! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!


அடுத்த வருடம் கலைஞர் பிறந்த தினத்தன்று, இந்த ஒரு வருடம் முறையாக மரத்தைப் பராமரித்து வருபவர்களுக்கு தங்க காசு பரிசளிப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழகத்தின்  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

இனி வரும் காலங்களில் இந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என  முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த வகையில் நடப்பாண்டில் கொண்டாடப்பட்ட ஜூன் 3ம் தேதி கருணாநிதி  99வது பிறந்த நாள் விழாவில்  முதல்வர் பல்வேறு உதவிகளையும்,கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார். 


இதன் ஒரு பகுதியாக அமைச்சர் சேகர்பாபு கலைஞர் பிறந்த நாள் விழாவில்  சென்னை அண்ணாநகரில் மாவட்ட கிழக்கு மாவட்ட சுற்றுச் சூழல் அணி சார்பில் 9999 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். மேலும் மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருபவர்களுக்கு அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்த நாளில் தங்க நாணயம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

 

இது குறித்து “தமிழகம் முழுவதும் கலைஞர் பிறந்த நாளில் மரக்கன்றுகளை நட்டு,அதனை நன்றாக பரமாரித்து வருபவர்களுக்கு குழுவை வைத்து தேர்வு செய்து அடுத்த ஆண்டு இதே நாளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதை ஊக்குவிப்பதன் அடிப்படையில் இந்த கௌரவம் செய்யப்படும் எனத்  தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog