தமிழ்நாடு முழுக்க தீவிரம் எடுக்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?808359389


தமிழ்நாடு முழுக்க தீவிரம் எடுக்கும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?


வானிலை மையம் ரெட் அலர்ட்

நீலகிரியில் கனமழை முதல் அதி கனமழை மழை பெய்யும் என்றும், இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கபட்டுள்ளது. இதனையடுத்து உதகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கன மழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு

நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மழை பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் அதை சமாளிக்க அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 44 போ் செவ்வாய்க்கிழமை காலை உதகைக்கு வந்தனர். பின்னர், கூடலூர் பகுதிக்கு 22 பேரும், உதவி ஆய்வாளர் பிரதீப் குமார் தலைமையில் குந்தா பகுதிக்கு 22 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

தயார் நிலையில் மீட்பு குழுவினர்

இதற்கிடையே உதகை பகுதியில் மழை பாதிப்பு ஏற்பட்டால் சமாளிப்பதற்காக மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜெகதீசன் உத்தரவின் பேரில் உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மழை அதிகம் பெய்யக்கூடிய, குந்தா, கூடலுார் வட்டத்தில், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

 

இரவு நேர போக்குவரத்துக்கு தடை

கனமழை காரணமாக நேற்றும், இன்றும் நீலகிரியிலிருந்து, கேரளா செல்லும் வழிக்கடவு - நாடுகாணி நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாலுகா வாரியாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறை இணைந்த பயிற்சி பெற்ற முதல் நிலை மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், உத்தரவை மீறி பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

முடுக்கிவிடப்பட்டுள்ள மீட்புப் பணிகள்

நீலகிரி மாவட்டத்தில், மழை பாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ள உள்ளூர் தீயணைப்பு வீரர்களுடன், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில், இதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதனிடையே, தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் முரளீதரன் அறிவித்துள்ளார். கொடைக்கானல், வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog