ரஜினியை சந்தித்த விஞ்ஞானி நம்பி நாராயணன்! – மாதவன் பகிர்ந்த வீடியோ!1372819376
ரஜினியை சந்தித்த விஞ்ஞானி நம்பி நாராயணன்! – மாதவன் பகிர்ந்த வீடியோ!
நடிகர் மாதவன் தானே எழுதி, இயக்கி, நடித்தும் இருந்த படம் “ராக்கெட்ரி; நம்பி விளைவு”. இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படமான இதில் சிம்ரன், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பல மொழிகளிலும் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
படம் வெளியான சமயம் திரையரங்கில் சென்று பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக புகழ்ந்து மாதவனை பாராட்டியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மாதவனும், விஞ்ஞானி நம்பி நாராயணனும் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தனர்.
இதுகுறித்த வீடியோவை பகிர்ந்துள்ள நடிகர் மாதவன் “திரைத்துறையின் ஒன் மேன் மற்றும் லெஜண்டிடம் இருந்து ராக்கெட்ரி படத்திற்கு பாராட்டு கிடைத்தது அந்த படத்திற்கான நித்தியத்தை அடைந்துள்ளது. உங்களுடைய கனிவான வார்த்தைகளுக்கும், அன்புக்கும் நன்றி ரஜினிகாந்த் சார். இது தொடர்ந்து எங்களை உற்சாகமாக செயல்பட வைக்கும்” என தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment