மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!


மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!


நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை  உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

இதனிடையே,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  திருநெல்வேலி மாவட்டத்திற்கும் நேற்று முன்தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்க்கது.

Tags:

Comments

Popular posts from this blog