பந்து வீச்சில் சொதப்பிய பெங்களூரு- 208 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்ற பஞ்சாப்
ஐ.பி.எல் 2022 சீசனின் மூன்றாவது போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூ ப்ளஸிஸும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர். ராவத் 21 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் டூ ப்ளஸிஸ் அதிரடியாக ஆடினார். கோலியும் டூ ப்ளஸிஸும் அதிரடியாக ஆடி அணியின் ரன்னை உயர்த்தினர்.
டூ ப்ளஸிஸ் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கோலி 29 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வாலும் ஷிகர் தவானும் களமிறங்கினர். மயங்க்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment