Japan Earthquake: ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி 94 பேர் காயம்
Japan Earthquake: ஜப்பான் நிலநடுக்கத்தில் இருவர் பலி 94 பேர் காயம் டோக்கியோ : ஜப்பானில் ஏறபட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர், 94 பேர் காயமடைந்தனர் புகுஷிமா மற்றும் மியாகி மாகாணங்களின் கரையோரங்களில் சுனாமி ஏற்படுவதற்கான ஆலோசனையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் நீக்கியது. ஜப்பானில் (2022, மார்ச் 16) அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர், 94 பேர் காயமடைந்தனர். ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஃபுகுஷிமா கடற்கரையில் புதன்கிழமை இரவு 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் படிக்க | ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை புகுஷிமா பகுதியில் இருக்கும் கடலில் சுமார் 60 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜப்பான் நேரப்படி இரவு 11.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். கடல் பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பின சுமார் இரண்டு மில்லியன் வீடுகளில் ம...